India
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் புகைப்படங்கள் !
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் போலிஸூக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார். கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!