India
“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” : தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு X-Ray எடுத்து பரிசோதனை செய்தனர். X-Ray ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், அவரது தொண்டையிலுள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கியுள்ளது தெரிந்தது. பின்னர் இது குறித்து அவரிடம் விசாரித்த போது, தான் எதையும் உட்கோள்ளவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் கேட்கையில், தான் வழக்கமாக அருகிலிருக்கும் ஒரு கோயிலில் நீராடி, அந்த நீரை பருகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவருக்கு ENDOSCOPY என்ற சிகிச்சை மூலம் தொண்டையில் சிக்கியிருந்த பொருளை தொண்டை வழியே வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக அணுகினார்.
அவரை பரிசோதனை செய்ததில், தொண்டையில் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது உணவுக் குழாயில் சிலையின் இடது கால் சிக்கிக் கொண்டதால் எங்களுக்கு மிகவும் கடினமாகவும் சவாலாக இருந்தது. எனவே எதை சாப்பிட வேண்டுமென்றால் பார்த்து சாப்பிடுங்கள், பருகுங்கள்" என்றனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!