India

Crypto Currency-ல் ரூ.1000 கோடியை இழந்த இந்தியர்கள்.. தனியார் சைபர் கிரைம் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் பணக்காரர் முதல் சமானியர்கள் வரை கிரிப்போட கரன்ஸியில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கிறது என கருதி இதில் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், இந்த கிரிபோட கரன்ஸிக்கு ஒரு முறையாக வரைமுறையில்லாததால் பணத்தை முதலீடு செய்பவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அதேபோல் போலியான கிரிப்போட கரன்ஸி முதலீடு இணையங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக உள்ளது.

இந்த போலி இணையங்களை உண்மை என நம்பி பலர் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போலி இணையங்கள் மூலம் இந்தியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ரூ.1000 கோடியை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலைத் தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இந்த போலியான இணையதளங்களை கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கிரிப்ட கரன்ஸிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து ஒருமசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் போலியான கிரிப்போடா கரன்ஸியால் ரூ.1000 கோடியை இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்விக்கு எதுவும் தடையல்ல.. கணவன் மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயது பெண்!