India
பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடித்தே கொன்ற பெண்.. கேரளாவில் நடந்த பரபரப்பு சம்பவம்!
கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. கணவரைப் பிரிந்து தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சசிதரன் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சசிதரன் ரஜினி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதையடுத்து வழக்கம்போல் நேற்றும் சசிதரன் வந்துள்ளார். அப்போது ரஜினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சசிதரன், ரஜினியை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து எழுந்த அவர், வீட்டிலிருந்து இரும்பு கம்பியை எடுத்து சசிதரன் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இறந்த சசிதரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பெண் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!