India
மோடியின் 4 மணி நேர வருகைக்காக ரூ. 24 கோடி செலவு செய்த பெங்களூரு மாநகராட்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
ஜூன் 20ம் தேதி 12 மணிக்குப் பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழம், மொம்மகட்டாவில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுகளை முடித்து விட்டு 4.30 மணிக்கு மைசூருக்கு புறப்பட்டு சென்றார். இவரின் இந்த 4 அரைமணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்ற சாலைகளில், மேடு பள்ளம் இல்லாதவகையில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.14 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற பணிகளுக்காக ரூ.10 கோடி கோடியும் என ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி, கமிஷ்னரின் நிதியிலிருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமரின் 4 மணி நேர வருகைக்காக மட்டும் ரூ. 24 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்படி ஆடம்பரமாக வீண் செலவு செய்யும், பா.ஜ.க அரசுகள்தான், அக்னிபாத் திட்டத்தில் ஓய்வூதியம் இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்துப் இளைஞர்கள் போராடுவதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!