India
விஜய்சேதுபதி பட பாணியில் காத்துவாக்குல 2 காதல்.. ஒரே நேரத்தில் 2 காதலிகளை திருமணம் செய்த இளைஞர் !
ஜார்க்கண்ட் மாநிலம், லொஹர்தாக பாந்தரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஓரான். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த குசமும் பந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
மேலும், இந்த காதலிகள் மூன்று ஆண்டுகளாக லிவிங் வாழ்க்கையில் இருந்துவந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் செங்கள் சூளை வேலைக்கு சந்தீப் சென்றுள்ளார்.
அப்போது அங்கு, ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரும் நட்பாகப் பழகிவந்தனர். பின்னர் நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இது பற்றி அறிந்த சந்தீப்பின் குடும்பத்தினர் ஸ்வாதியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சந்தீப் இருவரையும் காதலிப்பதாகக் கூறி விடாப்பிடியாக இருந்துவந்துள்ளார்.
அவரின் இந்த காதல் விவகாரம் கிராம பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. அங்கும் அவர் இருவரையுமே காதலிப்பதாகவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் இரண்டு காதலிகளின் நெற்றியில் திலகமிட்டு மனைவிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய சந்தீப், "இரண்டு பெண்களைத் திருமணம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் நேசிக்கிறேன். அவர்களின் ஒருவரை என்னால் விட்டுவிட முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!