India
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்: விசாரணையில் போலிஸ் ஷாக்!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் (24) ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் பலரும் தங்குவது வழக்கம். இவ்வாறாக கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில், அந்த இளம்பெண் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென்று பெண்கள் கழிவறையின் உள்ளே நுழைந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன், அந்த பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். உடேன அந்த பெண், 'நீ எதுக்கு இங்கு வந்த.. நீ இங்கெல்லாம் வரக்கூடாது' என்று சொல்லி துரத்த முயன்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் உள்ளிருந்து கழிவறையின் கதவை மூடி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு சிறுவன் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், அச்சிறுவன் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த சனிக்கிழமை ஹைரித்வாரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுவன், தனது குடும்பத்தாருடன் சுமார் 2 நாட்களாக அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற நாளான வெள்ளிக்கிழமை அவர் ஹோட்டலை காலி செய்வதாக இருந்தபோது இளம் பெண்ணை வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !