India
பல் வலிக்கு சிகிச்சை எடுத்தபோது நடந்த கொடூரம்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கதறும் நடிகை!
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுவாதிக்குப் பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர், மருந்துக்குப் பதில் ஊசி ஒன்றைக் கொடுத்து அதைச் செலுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் சுவாதியும் அந்த ஊசியை செலுத்தியுள்ளார்.
ஆனால், ஊசி செலுத்திக் கொண்ட சில மணி நேரத்திலேயே அவரது முகம் வீங்கியுள்ளது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து உடனே மருத்துவரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
இதற்கு மருத்துவர், அப்படிதான் இருக்கும் வீக்கம் குறைந்துவிடும் என கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து முகம் வீக்கத்துடனே இருந்துள்ளது. மீண்டும் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டபோது உரிய பதிலை யாரும் அவருக்குத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையின் தவறான சிகிச்சை குறித்து நடிகை சுவாதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!