India
ஹெலிகாப்டர் பிசினஸ் பன்னனும்.. ரூ.6.65 கோடி கடன் கொடுங்க : வங்கியில் முறையிட்ட விவசாயி!
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி அருகேயுள்ள தக்டோடா கிராமத்தை சேர்ந்த கைலாஸ் பதாங்கே என்ற 22 வயதான விவசாயி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது நிலத்தில் சோயாபீன் பயிரிட்டுள்ளார். ஆனால், போதிய மழை பெய்யாததால் அவரால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.
இதன் காரணமாக, லாபம் ஈட்ட வேறு வழி இருக்கிறதா என யோசித்த அவர், ஹெலிகாப்டர் வாங்கி அதை வாடகைக்கு விட்டு லாபம் ஈட்டலாம் என முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து விசாரித்த அவர், பின்னர் ஹெலிகாப்டர் வாங்க வங்கி ஒன்றில் ரூ.6.65 கோடி கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். அவரின் இந்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளதால் இது லோக்கல் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள அவர், அடுத்தவர் மட்டும்தான் பெரிய கனவுகளைக் காண வேண்டுமா? விவசாயிகளும் பெரிய கனவுகளைக் காண வேண்டும். மற்ற தொழில்களில் போட்டி அதிகம். அதனால் ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்தேன்"எனக் கூறியுள்ளார்.
சமீப காலமாக இந்தியாவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவது மிகப்பெரிய தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஹெலிகாப்டரை தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வாடகைக்கு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயி ஒருவர் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடும் தொழிலில் குதிக்க வங்கியில் கடன் கேட்டுள்ளது இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!