India
நாடுமுழுவதும் வலுக்கும் போராட்டம்.. அக்னிபாத் திட்டம் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
மேலும் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள் தங்களின் போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ராணுவத்திற்குத் தயாராகி வந்த இளைஞர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டத்தில்,ஒரு இராணுவ வீரர் வெறும் 4 வருடங்கள் மட்டுமே இந்திய இராணுவ பணியில் இருக்க முடியும்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசோம் ரைஃபில்ஸில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் முதல் பேட்ச் அக்னிபாத் வீரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என்றும் அடுத்து சேருவோருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!