India
"பிணந்தின்னி கழுகு பா.ஜ.க".. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க தனது 8 ஆண்டுக்கால ஆட்சியைப் பெருமையாகப் பேசி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு மோசமான 8 ஆண்டுகள் என பா.ஜ.க ஆட்சியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மக்களுக்கு எதுவுமே செய்யாத பா.ஜ.க 2024ம் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க என கடுமையாக விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,"பா.ஜ.க ஒரு பயனற்ற கட்சி. நாடு கண்டிராத திறமையற்ற கட்சி இது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பது நாட்டு மக்களுக்கு நல்லது.
யாராவது உயிரிழப்பார்கள் அப்போது அந்த உடலைச் சாப்பிட முடியும் என காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க. இவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரிய ஊழல். இதன் மூலம் நாம் என்ன சாதித்தோம்? ரூ.500 கள்ளநோட்டுகள் 102% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!