India
சொந்த பேத்தியை சிகரெட் புகைக்க வற்புறுத்திய கொடூர தாத்தா: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்கும் படி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் பெற்றோர் ஆகியோரை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் தாய், "சிகரெட் பிடிக்கச் சொல்லி குழந்தையை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். எனது குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினர்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !