India
பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட ஆலூர் கிராமத்தில் உள்ள வயலில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யானையில் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி சையத் சித்தார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 யானைகள் மர்மாக உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் குறியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!