India
தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு.. சாப்பிடும் போது இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கேரள மாநிலம், செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக். இவரது மனைவி பாத்திமா ஹானான். இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த ஹானான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாப்பிடும்போது இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கியதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!