India

”இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையே போட்டி”.. மெஹபூபா முஃப்தி காட்டம்!

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான இந்துத்வ கும்பலின் தாக்குதல்கள் ஒன்றிய அரசின் பாஜக ஆட்சியமைத்த நாளில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து வந்த பா.ஜ.க மற்றும் இந்துத்வ கும்பலின் அடக்குமுறைகள், தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்களாக எண்ணித் தாக்குவதும் நடைபெறுகிறது.

அண்மையில் கூட மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர் என நினைத்து அவரது அடையாள அட்டையைக் காட்டச் சொல்லி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையோ போட்டி நிகழ்கின்றனர் என ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஹபூபா முஃப்தி செய்தியாளர்களிடம், ஆங்கிலேயர்கள் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரத்தைச் செய்தார்கள். தற்போது பா.ஜ.கவும் அதே பிரச்சாரத்தை செய்து வருகிறது. இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையோ போட்டி போடுகின்றனர்.

இதனால் தான் மசூதிகளில் கோயில்கள் இருப்பதாக வேண்டும் என்றே பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதை பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார். அவரது கட்சி செய்வதைச் சரி என்று நினைக்கிறார். குஜராத், உத்தர பிரதேசத்தை போலவே மற்ற மாநிலங்களிலும் ஏற்படுத்த இவர்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Also Read: மாயாஜாலம் காட்டும் ஒன்றிய அரசு; இந்த விலை குறைப்பு கொள்ளையடிப்பதற்கு சமம்: புட்டு புட்டுவைத்த ப.சிதம்பரம்