India
அணையின் மீது ஏறி வீண் சாகச முயற்சி.. 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள ஸ்ரீனிவாச சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அணையின் மீதுள்ள சுவரின் மீது ஏற முயன்றுள்ளார். பின்னர் இவர் சுவரின் பாதி உயரம் ஏறிய பிறகு, மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கேயே எண்ணச்செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் கீழே இறங்க முயன்றபோது, அணையிலிருந்து சறுக்கிக் கொண்டே கீழே விழுந்துள்ளார். இதில் அந்த இளைஞருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு, அங்கிருந்த சக சுற்றுலாப் பயணிகள் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சாகர் பகுதி போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த அந்த இளைஞர் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!