India
வீட்டை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சடலமாக இருந்த தாய், 2 மகள்கள்: விசாரணையில் பகீர்!
டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அருகே வசிப்பவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் மஞ்சுவின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய மூன்று பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீடுமுழுவதும் சிலிண்டர் கியாஸ் வாயு நாற்றம் அடித்துள்ளது. தற்கொலை கடிதம் ஒன்றும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கொரோனாவால் மஞ்சுவின் கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் மஞ்சுவும், அவரது இரண்டு மகள்களும் கடும் மன அழுத்தத்திலிருந்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!
-
வண்டலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. வாய்கிழிய பேசிய முதலமைச்சர் எங்கே? : உதயநிதி கண்டனம்!
-
கழிப்பறைக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி : வண்டலூர் அருகே நடந்த கொடூர சம்பவம்!