India
காதலியுடன் பேசிய நண்பன்.. ஆத்திரத்தில் 12ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்: போலிஸ் ஷாக்!
தெலங்கானா மாநிலம், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பள்ளியில் துர்க பிரசாத் என்ற மாணவன் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் பேசிவந்துள்ளார். இதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் அந்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது தோழியுடன் துர்க பிரசாத் தொடர்ந்து பேசி வந்ததால் அந்த மாணவன் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவன், துர்க பிரசாத்தை தனியாக அழைத்துச் சென்று மாணவியுடன் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துர்க பிரசாத்தை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பிறகு அப்பகுதி மக்கள் துர்க பிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து 12ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியுடன் பேசிய மாணவனை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!