India
கயிற்றால் மகளின் கழுத்தை நெரித்த தந்தை.. கணவன் மீது புகார் கொடுத்த மனைவி : விசாரணையில் ‘பகீர்’!
திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி துர்கா. இந்த தம்பதியின் மகள் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அய்யப்பன் எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். மேலும் ஜெகனுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் அருகே காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதைப்பார்த்த அய்யப்பன் மகளையும், ஜெகனையும் கண்டித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் வீட்டிற்குச் சென்று, கயிறு ஒன்றை எடுத்து வந்து மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே அய்யப்பனிடம் இருந்து, மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய், தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!