India
பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. கேரளாவில் அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள் - பகீர் சம்பவம்!
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். எந்தவொரு சத்தமும் கேட்காத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்ட வில்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், ஷெரின் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷெரின் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிந்தது. மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டிருந்ததையும் போலிஸார் கண்டறிந்தனர்.
மேலும் நண்பர்களிடத்தில் நடத்திய விசாரணையில், ஷெரின் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் இருவரை தீவிரமாக காதலித்ததாகவும், திருங்கை என்பதால் அவரது காதலை முறித்துக்கொண்டு இளைஞர் பிரிந்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்தவாரம் கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா என்ற இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!