India
அதிகரிக்கும் காலநிலை மாற்றம்.. 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடும் அபாயம் - ‘பகீர்’ கிளப்பும் ஆய்வு !
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விவசாய வீழ்ச்சி மற்றும் உணவு விநியோக சீர்குலைவின் காரணமாக 2030க்குள் அதிகமான இந்தியர்கள் பட்டினிக்கு ஆளாகக்கூடும் என உலகளாவிய உணவுக் கொள்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை 2022 இல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விவசாய சீர்குலைவால் 2030க்குள் சுமார் 73.9 மில்லியன் இந்தியர்களை பட்டினிக்கும் தள்ளும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.
ஏற்கனவே அதிக வெப்பநிலை, மழைப்பொழிவு, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பிற விளைவுகள் காரணமாக விவசாயத்தின் விளைச்சலும், உணவு விநியோகமும் சீர்குலைந்துள்ளது. 2100 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடை வெப்ப அலைகள் மும்மடங்காக, அதாவது 2.4 டிகிரி C முதல் 4.4 டிகிரி C வரை உயரும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, 2021 உலகளாவிய பசி குயீட்டின் ( Global Hunger Index) கூற்றுப்படி, 116 நாடுகளில் இந்தியா 101 வது இடத்தில் உள்ளது. மேலும் அதிக பசியின் அளவும் தீவிரமாகியுள்ளது. நெல் உற்பத்தியில் இருந்து சுற்றுச் சூழல் சீரழிவு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் ஆகியவற்றிற்கு மானியங்கள் பங்களிக்கின்றன. இந்தியாவில் 1967 முதல் 2016 வரையிலான பயிர்களுக்கான உற்பத்தி தரவுகள் என்பது வெப்பநிலை அதிகரிப்பதால், நிலத்தின் சராசரி உற்பத்தி திறன் குறைந்து இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது.
க்ரீன்ஹவுஸ் உமிழ்வைக் குறைக்க “வடமேற்கு மற்றும் தீபகற்ப இந்தியாவில்”, அரிசியிலிருந்து மற்ற பயிர்களுக்கு மாற வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். இதன் காரணமாக உணவுப் பாதுகாப்பிற்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் அரிசியின் நிலப்பரப்பை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என நிபுனர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!