India

“வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்திய ‘SBI’.. EMI அதிகரிக்க வாய்ப்பு..?” : கதி கலங்கும் வாடிக்கையாளர்கள்!

வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை எஸ்.பி.ஐ உயர்த்திருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பில், கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்ததைத் தொடர்ந்து 7.20% ஆக அதிகரித்துள்ளது.

இதுபோல் மூன்று மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 10 பி.பி.எஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்.சி.எல்.ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்.சி.எல்.ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இ.எம்.ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

Also Read: பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதை நியாயப்படுத்தி பேசிய SBI தலைவர் - கொந்தளித்த வங்கி ஊழியர்கள்!