India
கேரள மாணவி சாப்பிட்ட ஷவர்மாவில் ஷிகெல்லா வைரஸ்?.. மாணவியின் உடற்கூறு ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பள்ளி மாணவர்கள் 18 பேருடன் சேர்ந்து பள்ளியின் அருகில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.
பிறகு சிறிது நேரத்திலேயே ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிகிச்சையிலிருந்த தேவநந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ததில் பழைய கோழிக்கறியை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் உடற்கூறு ஆய்வில், கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிலிருந்த ஷகெல்லா என்ற வைரஸ் மாணவியின் இறப்புக்குக் காரணமாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவிகளில் மூன்று பேருக்கும் இந்த ஷகெல்லா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அந்த மூன்று மாணவிகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷிகெல்லா வைரஸ் என்பது சுகாதாரமில்லாத தண்ணீர் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்களில் உற்பத்தியாகக் கூடியது. இதைச் சாப்பிடும் போது அது மனிதர்களுக்கும் பரவி அவர்களின் உயிரை பலி வாங்கிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தரமான ஷவர்மா தயாரிக்க புதிய வழிகாட்டுநெறிமுறைகளை சமர்பிக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!