India
நைசை பேசி சிறுவனிடம் சில்மிஷம்.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. ஆட்டோ டிரைவர் மீது பாய்ந்த போக்ஸோ!
சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி கோவிந்த சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் (28). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 30-ந் தேதி இரவு காமராஜர் சாலையில் ஆட்டோவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 12 வயது சிறுவனிடம் அவர் நைசாக பேசியுள்ளார்.
பின்னர் அந்த சிறுவனை ஆட்டோவில் ஏற்றி மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், ஆட்டோ டிரைவர் ஸ்டீபனிடம் இருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியிருக்கிறான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தனது மகனுக்கு நேர்ந்தது குறித்து புதுச்சேரி குழந்தைகள்நல பாதுகாப்பு குழுவிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
அதனையேற்று நடத்தப்பட்ட விசாரணைக்கு பின், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார் ஆட்டோ டிரைவர் ஸ்டீபனை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!