India
“ஆசையாய் வாங்கி ஆறே நாளில் பல முறை ரிப்பேர்” : கழுதையை கட்டி ‘ஓலா’ ஸ்கூட்டரை இழுத்துச் சென்ற வாலிபர் !
வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின.
பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில்பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓலா மின்சார ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது. சச்சின் கிட்டே என்ற நபர் சமீபத்தில் புதிதாக ஓலா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஓலா நிறுவத்திடம் கேட்டபோதும் முறையாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த சச்சின் கிட்டே, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூதனப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
அவர் வாங்கிய ஓலா ஸ்கூட்டரில் கழுதையைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். மேலும் கழுதை மற்றும் வாகனத்தின் முகப்பு மற்றும் கழுதையின் கழுத்தில், ஒரு அட்டையில் ஓலா நிறுவத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. வாகனத்தை யாரும் நம்பி வாங்காதீர்கள் என்ற பதாகையுடன் நகரையே சுற்றி வலம் வந்துளார்.
இதுதொடர்பாக சச்சின் கிட்டே கூறுகையில், ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்கூட்டர் அது. 6 நாட்களே ஆன நிலையில், இன்று ஸ்கூட்டர் வேலைசெய்யவில்லை. ஓலா சர்வீஸ் செண்டர் செய்த சோதனையும் சரியாக இல்லாததால், அடிக்கடி பழுதாகியது என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!