India
தலைக்கேறிய போதை; போன் கடையில் சிகரெட் கேட்டு ரகளை: விலையுயர்ந்த மொபைல் பறிப்பு; பிரபல ரவுடிகளுக்கு காப்பு
புதுச்சேரி சின்ன சுப்பராயபிள்ளை வீதியை சேரந்தவர் அர்ஜுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ஜுனன் கடையை மூடி கொண்டிருந்த போது, இரண்டு நபர்கள் மது போதையில் செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது அர்ஜுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். மதுபோதையில் தலைகால் தெரியாத அவர்கள், அர்ஜுனனின் பேச்சால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ஜுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிஸார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் (30) மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் குமார் (28) என்பதும், குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மீது புதுச்சேரியில் கொலை அடிதடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !