India
விபரீதமான கண்ணாமூச்சி விளையாட்டு.. ஐஸ் க்ரீம் பெட்டியில் புகுந்த 2 சிறுமிகள் பலி; கர்நாடகாவில் சோகம்!
கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தை அடுத்த நஞ்சங்கூடு பகுதியில் ஐஸ்க்ரீம் பெட்டிக்குள் புகுந்த சிறுமிகள் இருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.
உயிரிழந்த சிறுமிகள் ராஜுநாயக்கா தம்பதியின் மகள் காவ்யா (5), மற்றும் நாகராஜா நாயக்கா தம்பதியின் மகள் பாக்யா (9) என தெரிய வந்துள்ளது.
வெகு நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த ஐஸ்க்ரீம் பெட்டிக்குள் புகுந்கு சிறுமிகள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பெட்டி பூட்டிக் கொண்டதால் உள்ளே மறைந்திருந்த இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனிடையே வெகுநேரமாக தங்களது மகள்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் அப்பகுதி போலிஸாருக்கு தகவல் கொடுத்து தேடி வந்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.
இந்த நிலையில்தான் ஃப்ரீஸர் பெட்டிக்குள் மறைந்திருந்த போது இருவரும் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்ணாமூச்சி விளையாட்டின் போது இந்த விபரீதம் நடந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இதனையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள எத்தனித்த போலிஸாரை தடுத்து மறைந்த சிறுமிகளுக்கு பெற்றோர் இறுதி சடங்குகளை செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!