India
இந்தியாவில் 10 ஆண்டில் 17 லட்சம் பேருக்கு HIV தொற்று.. எந்தெந்த மாநிலங்களில் எத்தனைப் பேர் பாதிப்பு?
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திர சேகர் கௌர் என்பவர் இந்தியாவில் எச்.ஐ.வி (HIV) தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தகவல் வெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் கேட்ட கேள்விக்கு தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 17 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 17,08,777 பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 3,18,814 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 2,84,577 பேரும், கர்நாடகாவில் 2,12,982 பேரும், தமிழ்நாட்டில் 1,16,536 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேரும், குஜராத்தில் 87,440 பேரும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் ரத்தம் தொடர்பு மூலமாக 15,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி பாதிப்பைச் சரி செய்யப் பிரத்தியேக மருந்துகள், சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில், உரிய மருத்துவ கண்காணிப்புடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ஐ.வி தொற்று குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !