India
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பலி.. திட்டமிட்ட கொலையா?” : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம், கவாஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தீ பிடித்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும், வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தபோது 2 வயது குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் உயிரிழந்தவர்கள் ராம்குமார் யாதவ், அவரது மனைவி கசம் தேவி, இவரது மகள் மனீஷா, மருமகன் சவீதா, இவரின் இரண்டு வயது குழந்தை மீனாட்சி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் ராம்குமார் யாதவின் மகன் சுனில் சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லாததால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். இதனால் அவர் ஏன் வீட்டை விட்டு வெளியே சென்றார் என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!