India
பெற்ற மகனை குத்திக் கொன்ற தந்தை.. வெறும் குடும்ப தகராறுதான் காரணமா? புதுவை அருகே நடந்த பயங்கரம்!
புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வந்துள்ளனர்.
இரண்டாவது மனைவிக்கு தினேஷ் (21) என்ற மகன் உள்ளார். இவர் புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவிகள் என்பதால் அடிக்கடி குடும்ப சண்டை நடத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இன்று இரவும் சண்டை நடந்துள்ளது. அப்போது மகன் தினேஷ் ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறாய்? என்று கேட்டு கிருஷ்ணமூர்த்தியை அடித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி, அருகிலிருந்த கத்தியை எடுத்து மகன் தினேஷின் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் நிலைதடுமாரி கீழே விழுந்த தினேஷ் அங்கேய இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து தினஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அரியாங்குப்பம் போலிசார் தலைமறைவான தினேஷின் தந்தையை தேடி வருகின்றனர். தந்தையே மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!