India
”பீகாரில் மது விற்பனை அமோகம்..” : ஒன்றிய அமைச்சரின் பேச்சால் கடுப்பான நிதிஷ்குமார்!
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார் முதல்வர் நிதிஷ்குமார். இருப்பினும் அடிக்கடி மாநில அரசை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ், பீகார் மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறியது, முதல்வர் நிதிஷ்குமாரை எரிச்சலடையச் செய்துள்ளது.
பாட்னா வந்த ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸிடம் செய்தியாளர்கள் மது விலக்கு சட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பசுபதி பராஸ், "பீகார் மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
மாநிலத்தில் அதிகமான மதுபானங்கள் கடத்தப்படுகிறது. இதனால் தான் போலிஸார் மதுபானங்களை கைப்பற்றுகின்றனர். மேலும் மதுபானங்களை கடத்துபவர்களும் கைது செய்யப்படுகின்றனர். பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் இருந்தும் மாநிலத்தில் சட்டவிரோதமான மதுபானங்கள் விற்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் இந்தப் பேச்சு பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் ஒன்றிய அமைச்சர் இப்படி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!