India
பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்.. மனைவியை ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற கணவன்: போலிஸ் ஷாக்!
மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை செய்தபோது அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. அடிக்கடி இவர் கணவருடன் சண்டைபோட்டு வந்துள்ளார்.
இதனால் அவரது கணவர் ரூ.1.5 லட்சத்திற்கு மனைவியை மனோஜ் பிரஜாபதிக்கு விற்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய ராஜஸ்தான் கடத்த முயற்சி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் மனோஜ் பிரஜாபதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவரையும் கைது செய்ய போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!