India
உச்சகட்ட போதை.. 10,000க்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவருக்கு தாலி கட்டிய இளைஞன்.. தெலங்கானாவில் சுவாரஸ்யம்!
மது போதையில் அட்டகாசம், அட்டூழியம் செய்பவர்கள் குறித்த வீடியோக்கள், செய்திகள் அடிக்கடி வெளியாவது வழக்கமே. ஆனால் தெலங்கானாவில் போதையில் இருந்த இரு நபர்கள் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவருக்கு மெடெக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆட்டோ டிரைவருக்குமே திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இருவரும் துமாபலபேட் கிராமத்தில் உள்ள மதுக்கடையில் சந்தித்து பழகியிருக்கிறார்கள். எப்போது முழு போதையில் இருக்கும் இருவரும் கடந்த மார்ச் மாதத்தன்று ஜோகிநாத் குட்டா கோவிலில் தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். அன்றைய நாளன்றும் முழு போதையிலேயே இருந்திருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இதனையடுத்து அண்மையில் ஆட்டோ டிரைவரை தேடி 21வயது இளைஞன் அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் இருவருக்கும் திருமணமானது குறித்து தனது பெற்றோரிடம் அந்த டிரைவர் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அந்த டிரைவரின் பெற்றோர் 21 வயது இளைஞனை வீட்டில் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் ஜோகிபேட் இளைஞர் போலிஸிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இரு தரப்பினரும் சேர்ந்து பேசி பிரச்னையை முடித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. போலிஸ் தரப்பிலிருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் பகிரப்படாமல் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னணி செய்தித்தாள்களில் ஜோகிபேட் இளைஞன் அந்த ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து வாழ 10 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம். அந்த பணத்துக்கு ஆசைப்பட்டே போதையில் இருந்த போது திருமணம் செய்திருக்கிறார்கள்.
போதை தெளிந்த பின்னர் உண்மை தெரிந்ததும் 1 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாழ முடியாது என பேசி இரு தரப்பும் பிரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!