India
இரவில் வெடித்த AC.. வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீ: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!
கர்நாடக மாநிலம், மாரியம்மன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் பிரஷாந்த். இவரது மனைவி சந்திரகலா. இந்த தம்பகுதிக்கு எஸ்.ஏ.அர்த்விக் என்ற மகனும்,ப்ரேரனா என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை இவர்கள் நான்கு பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் இருந்த ஏ.வி. வெடுத்துள்ளது.இதனால் வீடு முழுவதும் தீ பற்றியுள்ளது. பிறகு வீட்டில் தீ பிடித்ததை அறிந்த நான்கு பேரும் வெளியே வர முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், வீடு முழுவதும் புகை சூழ்ந்ததால் அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பிறகு, தீயில் கருகி உயிரிழந்த வெங்கட் பிரஷாந்த், மனைவி சந்திரகலா, எஸ்.ஏ.அர்த்விக், ப்ரோனா ஆகிய நான்கு பேரின் உடலும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மின்கசிவால் இந்த விபத்து எற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஏ.சி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!