India
கூலிங் பீர் இல்லாததால் ஆத்திரம்: மதுக்கடையில் அட்டூழியம் செய்த 3 இளைஞர்களை கம்பி எண்ணவைத்த புதுவை போலிஸ்!
புதுச்சேரியில் மதுபானக்கடை ஒன்றில் பீர் கூலிங்காக இல்லாததால், பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல் விடுத்த 3 இளைஞர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது வாங்க வந்த 3 இளைஞர்கள், கடையின் ஊழியரிடம் பீர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர்கள், பீர் கூலிங்காக இல்லை என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் பீர் பாட்டைலை உடைத்து கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டடி அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், மதுபானக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், ரகளையில் ஈடுபட்டவர்கள் ஜய்யங்குட்டி பாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் தருமபுரி பகுதியை சார்ந்த மணிகண்டன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
கைது செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசின் பணியா? : த.வெ.க அரசுக்கு DMK IT Wing சரமாரி கேள்வி!
-
“விவசாயிகளை அராஜகமாக கைது செய்துள்ள த.வெ.க அரசு” : கனிமொழி எம்.பி ஆவேசம்!
-
‘காமராஜரைப் போற்றிய திமுக..’ இரண்டு அமைச்சர் பதவிக்காக எத்தனை பொய் வேடம் - காங்கிரசை கண்டித்த முரசொலி!
-
ஓடிப்போய்விட்டார் : பேரவையில் த.வெ.க அரசின் முகத்திரையை கிழித்த எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி ஸ்டாலின்!
-
வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது : என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!