India
குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!
மகாராஷ்டிரா மாநிலம், போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இங்கு இருக்கும் ஏரிpபகுதி அருகே உதய் பின்கர் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய உதய் பின்கர் ஏரியில் குதித்துள்ளார்.
பின்னர் நீரில் மூழ்கிய அவர் தன்னைக் காப்பாற்றுப்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் நண்பர்களும் போதையில் இருந்ததால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அன்றை தினம் பூங்காவிற்கு விடுறை என்பதால் வேறு யாரும் அங்கு இல்லை.
இதனால், உதய் பின்கரை யாரும் காப்பாற்ற முடியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிஸார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உதய் பின்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!