India
WEDDING PHOTOSHOOT-ல் நடந்த விபரீதம்..புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!
கேரள மாநிலம், கடியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜில். இவருக்கு மார்ச் 14ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தம்பதியினர் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, நேற்று ஜானகிகாடு அருகே உள்ள குட்டியாடி ஆற்றில் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் இருந்த பாறை மீது தம்பதியனர் ஏறி புகைப்படத்திற்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் ரெஜிலுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!