India
நண்பனை கடத்தி கொலை செய்து உடலை காட்டு பகுதியில் வீசிய 13 வயது சிறுவன் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
டெல்லி ரோகினி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் காணாமல் போன சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுடன் ஒன்றாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அச்சிறுவனிடம் போலிஸார் விசாரணை செய்தபோது, சிறுவனின் வாக்குமூலத்தை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
காணாமல் போன சிறுவனின் அம்மா நகையையும், பணத்தையும் தொலைத்துள்ளார். இதற்கு இவன்தான் காரணம் என அச்சிறுவன் கூறியுள்ளார். இதனால் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த அடிவாங்கிய 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார். இதனால் சிறுவனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காட்டுப்பகுதிக்கு சென்ற போலிஸார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை செய்த சிறுவனை கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!