India

கையில் சகோதரனுடன் பள்ளியில் பாடம் கற்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமி.. வைரல் புகைப்படத்தின் பின்னணி !

மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிங்சிலியு. 11 வயது சிறுமியான இவர் டைலாங் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுமியின் பெற்றோர்கள் குடும்ப வறுமை காரணமாக தினமும் விவசாய வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் வீட்டில் தனியாக இருக்கும் தன சகோதரனை தூக்கிக் கொண்டு தினந்தோறும் சிறுமி மனிங்சிலியு பள்ளிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் சிறுமி தனது சகோதரனை மடியில் வைத்துக்கொண்டே பள்ளியில் பாடம் கவணிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுமியின் குடும்பத்திற்கு உதவ அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினரை அம்மாநில ஊரகத்துறை அமைச்சர் பிஸ்வஜீத் சந்தித்து பேசியுள்ளார். மேலும் சிறுமி பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவரின் கல்வி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவத்துள்ளார். அதேபோல் சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

Also Read: WEDDING PHOTOSHOOT-ல் நடந்த விபரீதம்..புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!