India
டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இளைஞர்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கான 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பின்னர் டெல்லி முதல்வர் அரவிந் கெஜிர்வால் உடன் சேர்ந்து அரசு மாதிரி பள்ளிகளைப் பார்வையிட்டார். இதையடுத்து இன்று மாலை டெல்லி - தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக இன்று காலை டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது டெல்லி மக்கள் முதலமைச்சரின் எளிமையையும், அவரின் உடற்பயிற்சியைக் கண்டு வியந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!