India
“இந்துக்கள் யாரும் இஸ்லாமியர் கடையில் இறைச்சி வாங்க கூடாது” : வீதி வீதியாக பிரச்சாரம் செய்த பஜ்ரங்தள்!
கர்நாடகா மாநிலத்தில் அண்மைக்காலமாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்துத்துவ கும்பல் நடந்துகொண்டு வருகிறது. இதன் மூலம் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே மத மோதலை ஏற்படுத்த இக்கும்பல் முற்சித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் கடைகளில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக்கூடாது என பஜ்ரங்தள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளனர்.
பத்ராவதி பகுதியில் நடந்த பிரச்சாரத்தின்போது இறைச்சி கடை வைத்திருந்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஷிவமோகா மாவட்டத்தில் உணவுக்கடை வைத்திருந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் போலிஸார் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பஜ்ரங்தள் அமைப்பின் இந்த பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்து கோவில் திருவிழாக்களின்போது இஸ்லாமியர்கள் கடை வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிப்படையாகவே பஜ்ரங்தள் அமைப்பினர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது மத மோதலை உருவாக்கவே இந்துத்துவ கும்பல் திட்டமிட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !