India

அமெரிக்காவில் இருந்து சோழர்கால சிலைகள் மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!

இந்தியக் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை மீட்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் இந்தியக் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து 13 இந்திய சிலைகளை, சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பழங்கால இந்தியச் சிலைகள் இருப்பதாகச் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் 13 இந்திய சிலைகளை மீட்டுள்ளனர். இதில் சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலையும் ஒன்று. இந்த சிலைகள் அனைத்தும் சுபாஷ் கபூர் என்ற கடத்தல் காரரிடமிருந்து வாங்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சிலைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ’ஓர் உடல்.. இரண்டு தலைகள்’: இந்தியாவில் ஒட்டிப் பிறந்த அதிசய குழந்தை - எங்கு தெரியுமா?