India
வகுப்பறையிலேயே குடிபோதையில் தூங்கி வழியும் ஆசிரியர்.. 6 மாதமாக தொடரும் அவலம்! #Viral
தெலங்கானாவில் அரசுப் பள்ளியில் குடிபோதையில் ஆசிரியர் தூங்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் என்ற ஆசிரியர் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
ஆசிரியர் சசிகாந்த் பணிக்கு வந்த நாள் முதல் தினமும் குடித்துவிட்டு போதையில் வகுப்பறையில் உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற இளைஞர் ஒருவர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை தட்டி எழுப்புவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர் மதுபோதையில் வகுப்பறையில் உறங்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் பள்ளிக்கு வரும் சசிகாந்தை பணி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!