India
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை!
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா மாவட்டத்திற்குட்பட்ட அஜ்னல் ஆற்றுப் பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்கு சென்று அந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த திரிலோக்சந்த் என்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ததில் போலிஸாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. திரிலோக் சந்த் சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அச்சிறுமியின் தந்தை அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திரிலோக் சந்தை சிறுமியின் தந்தையும், தாய்மாமாவும் வாகனத்தில் அஜ்னல் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் மறைத்து எடுத்து வந்த மீன் வெட்டும் அறிவாளால் திரிலோக்கை வெட்டி கொலை செய்துள்ளனர்.
பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து போலிஸார் சிறுமியின் தந்தை மற்றும் தாய் மாமாவை கைது செய்துள்ளனர். மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தந்தை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!