India
தோழியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி வீசிய பெண் - ‘பகீர்’ சம்பவம் : பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் தீபா ஜூகல் தாஸ். பள்ளி பேருந்து ஓட்டுநரான இவரை கடந்த சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது உப்பல்வடி பகுதியில் பிளாஸ்டிக் பையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. பிறகு அங்கு சென்ற போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரணை செய்தபோது அது மாயமான தீபா ஜூகல் தாஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் இவரை யார் கொலை செய்தது என்பது குறித்து விசாரணை செய்தபோது தீபா கடைசியாகத் தனது தோழி சுவர்ணா என்பவரைப் பார்த்துள்ளார் என்பது தெரியவந்தது. பிறகு போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
தீபா தனது தோழி சுவர்ணாவிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதை நீண்ட நாட்களாக தீபா திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தோழிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தீபா சம்பவத்தன்று தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கடன் கொடுத்தது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுவர்ணா தனது தோழியான தீபாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது கணவர் சாமி சோனியின் உதவியுடன் தீபாவின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து உப்பல்வடி பகுதியில் உள்ள புதரில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து தம்பதியர் இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
ரூ.51.04 கோடி - புதிய கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!