India
மனைவியை அடித்துக் கொடுமைப் படுத்திய கணவன்.. தாயைக் காப்பாற்ற சிறுவன் செய்த விபரீத செயல் !
மும்பை காந்தி வலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுக்ராம். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தினந்தோறும் பார்த்துவந்த அவரது மகன்கள் இரண்டு பேரும் தந்தை மீது கோபத்துடன் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்துள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் வந்த இரண்டாவது மகன் தாயை அடிப்பதை நிறுத்தும்படி தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்துத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அவரது மகனனே காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார். பிறகு போலிஸார் அவரது வீட்டிற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறகு போலிஸாரிடம் சரணடைந்த சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகாததால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். தாயை அடித்து கொடுமைப் படுத்தியதால் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!