India
நடுரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு இடையே சண்டை.. ஒருவர் சுட்டுக்கொலை: டெல்லியில் பயங்கரம்!
டெல்லியில் உள்ள துவாரா பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவன் உதவிக்குத் தனது நண்பனை அழைத்து வந்துள்ளார்.அவரும் எதிர்த்தரப்பு மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மாணவர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞரை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் குர்ஷித் என்றும், துப்பாக்கியால் சுட்ட மாணவர் மோனு என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மோனுவை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். மேலும் சண்டையில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்களிடமும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடுரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க நிர்வாகியிலிருந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரை! : மகாராஷ்டிரத்தில் வலுக்கும் கண்டனம்!
-
“பருவமழையை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்!” : ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் தெரிவித்தது என்ன?
-
”நிச்சயம் வெள்ள பாதிப்பு இருக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
”தடைகளை உடைத்து மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முதலமைச்சர்” : அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு!
-
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் அடுத்த நடவடிக்கை! : 2 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு!