India
Microwave Oven-ல் சடலமாக கிடந்த 2 மாத பெண் குழந்தை.. கொலையா? : போலிஸ் தீவிர விசாரணை- நடந்தது என்ன?
டெல்லி போலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் உடனே அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை மைக்ரோவேவ் அடுப்பில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்தான் தகவல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குழந்தையின் தாய் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், குழந்தை உயிரிழந்த நேரத்தில் அவரது தந்தை அருகே இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். இதனால் போலிஸார் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் தந்தையிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைக்ரோவேவ் ஓவனில் பெண் குழந்தை சடலமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!