India
தன் இச்சைக்காக மகளை இரையாக்கிய கொடூர தந்தை.. அண்ணன்,தாத்தா, மாமா என நீளும் பாலியல் குற்றவாளிகள் எண்ணிக்கை
வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பெற்ற தகப்பனே தன் 11 வயது மகளை பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் பள்ளி ஆலோசனை நிகழ்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
பீகாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மகராஷ்டிராவின் புனேவில் வசித்து வருகிறது. அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிக்குதான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பாலியல் ரீதியான ஆலோசனை பள்ளியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது, தனக்கு நேர்ந்தது குறித்து பாதிக்கப்பட்ட அச்சிறுமி ஆசிரியரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் சார்பில் சிறுமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில், கடந்த 2017ம் ஆண்டு முதலே அச்சிறுமி தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வருவதும், 2020ம் ஆண்டு அச்சிறுமியின் சகோதரனும், பிறகு தாத்தா மாமா ஆகியோரும் பாலியல் கொடுமை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோக, சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட நிகழ்வு குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸார் 45 வயதான தந்தை, சகோதரன், தாத்தா மற்றும் மாமா ஆகிய நால்வர் மீது 376, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!