India
துப்பாக்கியால் கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற போலிஸ்.. மதுபோதையில் நடந்த கொடூரம் !
அசாம் மாநிலம், திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிகி சேதியா. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். பிகி சேதியா காவலர் என்பதால் இவர்கள் இருவரும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த பிகி சேதியா பணிக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து கர்ப்பிணி மனைவியைச் சுட்டுள்ளார்.
திடீரென குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு, பிகி சேதியா வீட்டிற்குச் சென்று பார்த்தப்போது அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் கிழே கிடந்த ஜெயஸ்ரீயை மீட்டு, அருகீல் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பிகி சேதியாவை கைது செய்தனர். மேலும் மது குடித்திருந்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!